தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடாவாழ் புலம்பெயர் உறவுகளால் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன
THM 2023: Quebec Tamil Heritage Cultural Centre helps war affected families

கனடாவின் கியூபெக் தமிழர் மரபுக் கலாச்சார நடுவம், தாயகத்தில் வாழும் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை அண்மையில் வழங்கியுள்ளது.
கனடாவில் வாழும் தமிழ் மக்கள் தங்களது பண்பாடுகளை பேணிக்காக்கும் பொருட்டு தை மாதத்தினை தமிழர் மரபுத்திங்கள் என விமர்சையாக்க் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2016ல் கனடிய அரசாங்கம் தை மாதத்தினை தமிழர் கலாச்சார மாதம் என உத்தியோகபூர்வமாக அறிவித்தது யாவரும் அறிந்ததே. இதனையொட்டி இந்த ஆண்டு தமிழர் மரபுத்திங்கள் நிகழ்வைக் கியூபெக் தமிழர் மரபுக் கலாச்சார நடுவம் மற்றைய தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து 14-01-2023 சனிக்கிழமை அர்மேனியன் கலாச்சார மண்டபத்தில் வெகு விமரிசையாகக் கியூபெக் மாகாணத்தில் நடாத்தியிருந்தது. இந்நிகழ்வில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வருகை தந்ததோடு ,தமிழர்களின் வரலாறு, நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் ஈழ விடுதலைப்போராட்டம் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய கலை நிகழ்ச்சிகளைக் காண்பதோடு மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறையினரின் தமிழர் பண்பாட்டிற்கான பங்களிப்பை எண்ணி உவகையுற்றனர்.
இந்நிகழ்வின் மூலமாக ஈட்டப்பட்ட நிதியினை கியூபெக் தமிழர் கலாச்சார நடுவம் தாயகத்தில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக பயன்படுத்த முடிவு செய்தது. இதன் முதற்கட்டமாக தாயகத்தில் வாழும் போரினால் பாதிக்கப்பட்டு இன்றுவரை வாழ்வாதாரம் இல்லாமல் அவதியுறும் ஒன்பது குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு கடந்த 17-02-2023 வெள்ளிக்கிழமை தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இச்செயற்பாடானது புலம்பெயர்தேசங்களில் பெரும் பணச்செலவோடு நிகழ்வுகளை நடாத்தும் அமைப்புக்களுக்கு மத்தியில் மட்டுப்படுத்தப்பட்ட பணச்செலவில் நடாத்தப்பட்ட பிரமாண்ட நிகழ்வாக மட்டுமல்லாமல் தாயக மக்களின் நலன்களை கருத்திற்கொண்டமை பாராட்டுதற்குரியது. இவ்வாறான செயற்பாட்டிற்கு கியூபெக் தமிழ்மக்கள் தொடர்ந்தும் பேராதரவை வழங்கவேண்டுமென்றும் அத்தோடு, கியூபெக் தமிழர் கலாச்சார நடுவம் தொடர்ந்தும் இவ்வாறான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என வேண்டுகின்றோம்.+
The Quebec Tamil Heritage Cultural Centre provided sewing machines to war affected families in the Tamil homeland.
Quebec Tamil Heritage Cultural Centre
438-929-2472
quebectamilcentre@gmail.com