news

ஒண்டாரியோ Scarborough-Rouge Park தொகுதியில் அமோக வெற்றி பெற்றார் விஜய் தணிகாசலம்

இன்று 06.02.2022 வியாழக்கிழமை நடைபெற்ற ஒண்டாரியோ மாகாண தேர்தலில் Scarborough Rouge Park தொகுதியில் Ontario PC கட்சி சார்பில் போட்டியிட்ட திரு. விஜய் தணிகாசலம் இரண்டாவது தடவையாகவும் பெருமளவான வாக்குகள் ( 6120 ) வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளார்.

 

Ontario PC கட்சி சார்பில் போட்டியிட்ட விஜய் தணிகாசலம் 15,732 வாக்குகளினையும் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட மானால் அப்துலாகி 9,522 வாக்குகளினையும் NDP கட்சி சார்பில் போட்டியிட்டசாமுயேல் பெலிசியா7,576 பெற்றுக்கொண்டனர்.

Scarborough Rouge Park தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் திரு. கரி ஆனந்தசங்கரி அவர்கள் விஜய் தணிகாசலத்தினை எதிர்த்து போட்டியிட்ட தமிழர் அல்லாத லிபெரல் வேட்பாளரான மானால் அப்துலாகிக்கு தனது ஆதரவினை நேரடியாக வழங்கி இருந்ததினால் போட்டி பலமாக இருக்கலாம் என பலரும் எதிர்பார்த்த நிலையில் விஜய் தணிகாசலத்தின் வெற்றி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் லிபரல் கட்சியின் வெற்றியினையும் கேள்வி குறியாகியுள்ளதும் குறிப்பிட தக்கது .

இன்றைய வெற்றி விழாவில் உரையாற்றிய விஜய் அனைத்து வாக்காளர்களுக்கும் , ஆதரவாளர்களுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்தார்.

Related Articles

Back to top button