news

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மக்களுக்கு கனடா வாழ் உறவுகளால் 10 இலட்சம் பெறுமதியான உலர்உணவுப் பொருட்கள் கையளிப்பு.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மக்களுக்கு கனடா வாழ் உறவுகளால் 10 இலட்சம் பெறுமதியான உலர்உணவுப் பொருட்கள் கையளிப்பு.
 
கனடா வாழ் நண்பர்களின் உதவியினை நம் உறவுகளுக்கு கையளிக்கும் நிகழ்வு கடந்த ஞாயிறு சனவரி 2ம் திகதி முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட நூற்றுக்கு அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.
 
கனடா மொன்றியால் மற்றும் டொரோண்டோ வாழ் நண்பர்கள் இணைந்து ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் தாயகத்தில் வாழும் எமது உறவுகளுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு ” அறம் செய விரும்பு” என்ற வாசகத்திற்கு அமைய தங்களால் இயன்ற உதவியினை செய்து வருவது குறிப்பிட தக்கது. இந்த வருடம் கடந்த காலங்களில் இந்த நல்ல திடத்தில் இணைந்து இருந்த நண்பர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் என்று பலர் தாமாகவே நம்பிக்கை அடிப்படையில் இணைந்து சுமார் 10 இலட்சம் (1 மில்லியன் ) இலங்கை ரூபாக்கள் குறுகிய காலத்தில் திரட்டி அனுப்பி வைத்திருந்தமையும் குறிப்பிட தக்கது.
 

 
தாயகத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலய 100 மாணவர்களுக்கு தலா 10, 000 பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் மற்றும் உலர் உணவு பொருட்களும், நோய் காரணமாக வைத்தியசாலை செல்லும் போது எடுத்து செல்வதற்காக போர்வைகளும் வழங்கப்பட்டன. இந்த பணம் முழுவதுமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் நேர்த்தியான முறையில் சென்றடைவதற்காக மொத்த வியாபார தளங்களில் குறைந்த விலையில் கொள்வனவு செய்து வழங்கபட்டது.
 
இந்த பாடசாலை மாணவர்களில் பலரின் பெற்றோர் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக தமது விவசாய காணிகளின் பத்திரங்களை தொலைத்து விட்டதால் இலங்கை அரசால் கையகப்படுத்தப்பட்டு புதிய சிங்கள குடியேற்றங்கள் காரணமாக தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல் இந்த கொரோனா காலத்தில் மிகவும் பல இன்னல்களை எதிர்நோக்கி உள்ளனர்.
 
இந்த பாடசாலையில் கல்வி கற்கும் 276 மாணவர்களில் வெறும் 100 மாணவர்களுக்கு அதாவது பெற்றோரை இழந்த அல்லது பெண் தலைமை வகிக்கும் மாணவர்களுக்கு மாத்திரமே உதவ கூடிய நிலையில் இருந்தது. அண்மையில் நடைபெற்ற வீதி விபத்தில் உயிர் இழந்த பாடசாலை மாணவனின் குடும்பத்திற்கும் ரூபா 25, 000.00 கையளிக்க பட்டது.
 
ஏனைய மாணவர்களும் மிகவும் வறுமையிலேயே அதாவது World Vision Korea என்ற தன்னார்வ நிறுவனத்தினால் பல ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கிய புத்தக பைகள் தான் மிகவும் பழுதடைந்த நிலையில் பாவனையில் இருப்பது குறிப்பிட தக்கது. அதே போல அரசாங்கத்தினால் வழங்கப்படும் இலவச சீருடைகளை கூட தைத்து போடதேவையான பொருளாதார வசதி இல்லாத சூழ்நிலையிலும் பல மாணவர்களின் நிலை காணப்படுகின்றது.
 
மிக முக்கியமாக இந்த பாடசாலை மாணவிகளுக்கு மலசல வசதிகள் மற்றும் உயர்தர மாணவர்களுக்கு இரண்டு கொட்டகை வகுப்பறைகளும் மிகவும் அவசரமாக தேவைப்படுகின்றன.
 
இது போல நல்ல முயற்சி உள்ளவர்களை அரவணைத்து ஒற்றுமையுடன் பல நல்ல செயல் திட்டங்களில் பயணிக்க மொண்டமிழ் என்றும் தயாராகவே இருக்கின்றது.
 
“அறம் செய விரும்பு “
 
குறிப்பு : இந்த நிதி பங்களிப்பில் நம்பிக்கை அடிப்படையில் இணைந்து கொண்ட அனைவருக்கும் இதன் கணக்கு விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிகழ்வுக்கு Montamil மற்றும் எமது சக ஊடகங்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்வினை ஒளிப்படமாக கேழே பார்க்கலாம்.

Related Articles

Back to top button