கியூபெக்கில் ஊரடங்கு அமுலுக்கு வருகின்றது. உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டிருக்கும். பாடசாலைகளை மீளத்திறத்தல் தள்ளிவைக்கப்படுகிறது.
மக்களின் உடல்நலன் கருதி புதிய நடவடிக்கைகள் தேவைப்படுவதாக கியூபெக் முதலமைச்சர் தெரிவித்தார்.

மார்கழி 31 மாலை 5 மணியிலிருந்து பின்வரும்
நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரும்.
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறையிலிருக்கும்.
வீட்டினுள்ளே யாரும் கூட முடியாது. (விதிவிலக்குகள்: சேவைகள் புரிபவர்கள்,
உதவிபுரிவர்கள் மற்றும் தனியே வாழும் ஒருவருக்கு உதவுபவர்கள் ஒரு வீட்டின் உள்ளே செல்லலாம்)
உணவகங்களில் உள்ளிருந்து சாப்பிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது ஆனால் வெளியே எடுத்துக்கொண்டு செல்லமுடியும் அல்லது வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சென்று கையளிக்கமுடியும்.
வழிபாட்டுத் தலங்கள்: இறுதிச் சடங்குகளுக்கு மட்டுமே 25 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.
கடைகள்: அத்தியாவசியமாகக் கருதப்படும் வணிகங்களைத் தவிர மற்ற அணைத்து கடைகளும் ஞாயிற்று கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். (அத்தியாவசிய கடைகளாக கருதப்படும் எரிவாயு நிலையங்கள், மருந்தகங்கள் போன்றவை திறந்திருக்கும்)
வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளின் படி உள்ளரங்க விளையாட்டுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.(ஒரு தனிநபர், ஒரே வதிவிடத்தில் வாழும் இருவர் அல்லது இரு வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக
வாழும் ஜோடிகள் மட்டுமே பயிற்சிகள் மேற்கொள்ளமுடியும்)
அல்பைன் பனிச்சறுக்கு நிலையங்கள் மற்றும் பனிஊர்தி நிலையங்கள்:
சுகாதார நிலையம் மற்றும்
தயார்ப் படுத்தும் நிலையங்கள் திறந்திருக்கும். ஆனால்,
உட்பகுதியில் உணவருந்த முடியாது.
வெளிக்கள நிகழ்வுகள்: அதிகபட்சம் 250 பேர்.
பாடசாலைகள்
ஆரம்ப மற்றும் இடைநிலை பாடசாலைகள்:
நேரடிவகுப்புகளுக்கு மீண்டும் திரும்புவதுத் தை 17, 2022.
அத்தியாவசிய தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கான நாளாந்த பராமரிப்பு நிலையங்கள் திறந்திருக்கப்படும்.
கல்விசார் குழந்தை பராமரிப்பு நிலையங்கள் வழமைபோல் திறந்திருக்கும்.
Source: Quebec Government quebec.ca/coronavirus