news

இலங்கை அரசாங்க உயர்ஸ்தானிகர்கள் குழுவின் முருகன் ஆலயத்திற்கான வருகையும் அது தொடர்பான பொய் பிரச்சாரமும்!

இலங்கை அரசாங்க உயர்ஸ்தானிகர்கள் குழுவின் முருகன் ஆலயத்திற்கான வருகையும் அது தொடர்பான பொய் பிரச்சாரமும்!

கனடாவுக்கான இலங்கை அரசாங்க உயர்ஸ்தானிகர் அலுவலக முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்ட மொன்றியல் திருமுருகன் ஆலய சிறப்பு பூசை தொடர்பான பதிவுகளுக்கான விளக்கங்களை ஆலய நிருவாக உறுப்பினர் திரு நடராஜா வாகீசன் அவர்களை Montamil செய்திகளுக்காக தொடர்பு கொண்டு கேட்டு அறிந்தவற்றினை கீழே காணலாம்.


கனடாவுக்கான இலங்கை அரசாங்க உயர்ஸ்தானிகர்கள் குழு முருகன் ஆலயத்திற்கு வருகை தந்த செய்தி உண்மையானதா?
ஆம். கடந்த ஞாயிறு ஒரு புத்தபிக்கு சகிதம் சிலர் வருகை தந்திருந்தார்கள்.

இந்த வருகை முருகன் ஆலய நிருவாக சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறப்பு பூசையா?
இல்லை. இவர்களுடைய வருகை தொடர்பாக ஆலயத்திற்கு எந்தவிதமான முன்னறிவித்தலும் வழங்கப்படவில்லை .

அவர்கள் வருகை தந்த நேரத்தில் வேறு ஏதாவது பூஜைகள் நடைபெற்றதா?
ஆம். மொன்றியல் வாழ் தமிழர் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு ஒழுங்கு செய்த வழமையான பால் அபிஷேகம் நடைபெற்றது.

தாயகத்தில் இந்து கோவில்களை அவமதித்து சப்பாத்து கால்களுடன் ஆலயத்திற்குள் செல்லும் இவர்களை ஏன் இங்கு அனுமதித்தீர்கள் என்ற மக்கள் கருத்துக்கு என்ன சொல்ல விருப்புகின்றீர்கள்?
இது அனைவருக்கும் பொதுவான ஒரு ஆலயம் அதன் படி எம்மை நாடி வருபவர்களை தடுக்காது அனைவரையும் ஒன்றாக நடத்துவது தான் எமது மதத்தின் சிறப்பு அதனால் தான் நாங்கள் அவர்களை தடுக்கவில்லை.

கோவில் நிருவாக உறுப்பினரான திரு நடராஜா வாகீசன் என உங்கள் பெயர் குறிப்பிட்டு இலங்கை மற்றும் கனடா மக்களின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன?
அவர்கள் என்னிடமோ அல்லது ஏனைய ஆலய நிர்வாக சபையினரிடமோ இது தொடர்பாக எந்தவிதமான கலந்துரையாடல்களிலும் ஈடுபடவில்லை.

இந்த பதிவு தொடர்பாகவோ அல்லது அவர்களது ஆலய வருகை தொடர்பாக ஏதாவது கருத்து கூற விரும்புகிறீர்களா?
இந்த விடயம் தொடர்பாக நீங்கள் என்னை நேரடியாக அணுகி விபரங்களை கேட்டறிந்தமைக்கு நன்றி.

அவர்கள் தாங்களாகவே ஆலயத்திற்கு வருகை தந்துவிட்டு இவ்வாறு எனது பெயரையும் ஆலயத்தின் பெயரையும் இணைத்து ஆலயத்திற்கும் மக்களுக்குமான நல்லுறவை சீர்குலைப்பதற்காக முகப்புத்தகத்தில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பதியிட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

நன்றி

Related Articles

Back to top button