news

விழுதுகள் துயர்துடைப்போம் தாங்கிநிற்போம்

விழுதுகள் அமைப்பானது அகிலத்தில் அல்லலுறும் மக்களுக்கு
‘’ துயர்துடைப்போம் தாங்கிநிற்போம்’’ எனும் கோட்பாட்டுடன் காலத்தின் தேவைகருதி பணி செய்யும் சமூக வலுவூட்டும் அமைப்பாகும். இவ்வமைப்பானது ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாக காலத்தின் தேவைகருதி 2016 ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை கனடா, இந்தியா, தாயகம் என இதுவரைக்கும் 230 குடும்பங்களுக்கான பேருதவிகளை உலருணவுப்பொருட்களாகவும் ,தொழில்முயற்சிக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும், பல குழந்தைகளின் கல்வியைத்தொடர்வதகான மாதாந்தக் கொடுப்பனவாகவும் வழங்கியுள்ளது. இவ்வுதவிகளானது புலம்பெயர் மக்களின் பூரண ஆதரவோடு அவர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் நிதியினைப் பெற்று பயனாளிகளுக்கு நேரடியாகக் கையளிக்கின்றோம். எனவே விழுதுகள் அமைப்பானது தொடர்பாளர்களாக மட்டுமே பணி செய்கின்றது . மேற்படி பேருதவியைச் செய்துகொண்டிருக்கும் கொடையாளர்களாகிய அனைவருக்கும் தாயக உறவுகளின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

 

Related Articles

Back to top button