news

இலங்கையின் பிரபல பாடசாலைகளின் பழைய மாணவர்கள் பங்குபெறும் T10 Super Smash 2021

The Unions Sports Federation Of Canada நடாத்தும் T10 Super Smash 2021 மாபெரும் கிரிக்கெட் சுற்று போட்டிகள் அக்டோபர் 2ம் மற்றும் 3ம் திகதிகளில் King City யில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதன் முதற்கட்டமாக போட்டிகள் சம்பந்தமான விதிமுறைகள், அணிகளின் விபரங்கள், மற்றும் அனுசரணையாளர்களின் அறிமுகம் தொடர்பான ஊடக சந்திப்பு வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு Markham Convention Centre இல் நடைபெற்றது.

இந்த வருடம் நடைபெறும் சுற்று போட்டியில் இலங்கையின் இருபது(20) முன்னணி பாடசாலைகளின் கனடா பழையமாணவர்களின் அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டிகள் அனைத்தும் King City யில் ஒரே இடத்தில் அமைந்துள்ள ஐந்து மைதானங்களில் நடைபெற இருக்கிறது. அனைத்து போட்டிகளும் 10 ஓவர்களுக்கு மட்டுப்படுத்த பட்டதாக அமையும்.

போட்டிகளின் நேரடி ஓட்ட விபரங்களை Www.unionssfc.com பார்த்து மகிழலாம். இந்த கிரிக்கெட் தொடருக்கு அனலை எக்ஸ்பிரஸ், Montamil , IBC தமிழ் மற்றும் லங்காசிறியும் தங்களது ஆதரவினை வழங்குவது குறிப்பிட தக்கது.

Related Articles

Back to top button