news

கனடாவின் பிரபல வர்தகர்களில் ஒருவரான திரு. முத்தையா இராஜகோபால் கல்வியங்காட்டில் உள்ளக விளையாட்டரங்கம் அமைக்க 103 இலட்சம் ரூபா நிதியுதவி

103 இலட்சம் ரூபா நிதியுதவியில் கல்வியங்காட்டில் நிர்மாணிக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கம் !

கனடாவின் பிரபல வர்தகர்களில் ஒருவரான திரு. முத்தையா இராஜகோபால் கல்வியங்காட்டில் உள்ளக விளையாட்டரங்கம் அமைக்க 103 இலட்சம் ரூபா நிதியுதவி

இலங்கையின் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள செழிப்பான ஊர்களில் ஒன்றான கல்வியன்காடு பகுதியில் வாழும் மக்கள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியினை எந்த காலநிலையிலும் இடையூறு இல்லாமல் தொடர்வதற்கு உள்ளக விளையாட்டு அரங்கு மிகவும் முக்கியமானது.

இந்த தேவையினை பூர்த்தி செய்யும் முகமாக கனடாவில் வாழும் மிக பிரபல வர்த்தகர்களின் ஒருவரான திரு. திரு. முத்தையா இராஜகோபால் தனது பெற்றோரின் ஞாபகார்த்தமாக 103 இலட்சம் இலங்கை ரூபா செலவில் கட்டிடத்தை நிர்மாணிக்க முன்வந்து நிதி உதவி வழங்கியுள்ளார்.

இந்த வேலை திடடத்திற்கான பாதி நிதியினை அவரால் வழங்கபட்ட நிலையில் கடந்த வாரம் ஆவணி சதுர்த்தி நன்னாளில் அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன .

ஏற்கனவே இந்த மைதானத்தில் சிறுவர் பூங்கா, சிறுவர் பாடசாலை, என பல முன்னேற்ற செயற்திடடங்கள் புலம்பெயர் வாழ் கல்வியன்காடு மக்களால் முன்னெடுக்கபட்டுள்ளமையும் குறிப்பிடத் தக்கது.

இன்று பிறந்த நாள் காணும் திரு. முத்தையா இராஜகோபால் கனடாவில் பல நல திட்ட்ங்களுக்கு அனுசரணையாளராகவும் இருந்து வருகின்றார். குறிப்பாக Montamil ஊடகத்தின் ஆரம்பம் முதல் வெற்றிகரமாக இடம்பெற்ற MONTAMIL NIGHT இசை நிகழ்ச்சின் அனுரசாரணையாளர்களில் ஒருவருமாவார். இன்னும் பல ஆண்டு காலம் வாழ்ந்து பல சேவைகளை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button