news

கியூபெக் பொது மக்களுக்கு COVID-19 தடுப்பூசிகளை வழங்கவிருக்கின்றது. செயல்பாடு விபரங்கள் இதோ

MONTREAL—கியூபெக் மாநில அரசாங்கம், 50 இல் இருந்து 59 வயதினர் அனைவருக்கும் வெள்ளிக்கிழமை முதல் COVID-19 தடுப்பூசிகளுக்கான சந்திப்பை முன்பதிவு செய்ய முடியும் என்று அறிவித்துள்ளது.
அத்துடன் ஏனைய வயது பிரிவினரும் விரைவில் தடுப்பூசியை பெறுவதற்கான சந்திப்பை முன்பதிவு செய்யலாம்

முன்னர், முன்னுரிமையாக அதிக பாதிப்படையக்கூடிய மக்களுக்கே தடுப்பூசியை வழங்கினார்கள். தற்போது, மாகாணத்தின் அனைத்து பெரியவர்களும் விரைவில் தடுப்பூசிகளுக்கான சந்திப்பை Clic Santé வலைத்தளத்தில், இனி வரும் வாரங்களில் முன்பதிவு செய்யலாம்.

முதலாவது ஊசியை பெறுவதற்கு எந்த வயது பிரிவில் உள்ளவர்கள் எப்பொழுதிலிருந்து Clic Santé வலைத்தளத்தில் முன்பதிவு செய்யலாம் எனும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.

ஏப்ரல் 30ம் திகதி: 50–59 வயதினர்
மே 3ம் திகதி: 45–49 வயதினர்
மே 5ம் திகதி: 40–44 வயதினர்
மே 7ம் திகதி: 35–39 வயதினர்
மே 10ம் திகதி: 30–34 வயதினர்
மே 12ம் திகதி: 25–29 வயதினர்
மே 14ம் திகதி: 18–24 வயதினர்

Source: Quebec Health Ministry
Source: Quebec Health Ministry

அட்டவணை தற்போதய வயதை அடிப்படையாகக் கொண்டது, பிறந்த ஆண்டினை அல்ல.

கியூபெக், மே மாத இறுதிக்கு முன்பு 20.5 இலட்சம் ஊசிகளின் இறக்குமதியை எதிர்பார்க்கிறது. அவற்றில் அதிகமாக Pfizer-BioNTech தடுப்பூசிகள் அடங்கும். இந்த தடுப்பூசியை இரண்டு முறை பெற்றால் தான் அதன் முழுமையான எதிர்புசக்தி கிடைக்கும்.

“கியூபெக்கிற்கு இது ஒரு முக்கியமான நாள்” என்று வியாழக்கிழமை, சுகாதார அமைச்சர் Christian Dubé ஓர் செய்தி மாநாட்டில் கூறினார்.

இன்னும் பல Moderna மற்றும் Johnson & Johnson தடுப்பூசிகள் வரவிருக்கின்றன. Johnson & Johnson  தடுப்பூசியை ஒரு முறை பெற்றாலே அதின் முழுமையான எதிர்புசக்தி கிடைக்கும்.

AstroZeneca-Oxford தடுப்பூசிகள் தற்போது 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு மட்டுமே வழங்கப்படும் என்று மாகாணத்தின் பொது சுகாதார இயக்குனர் Dr. Horacio Arruda இயம்பியுள்ளார். இந்த விபரம் Clic Santé வலைத்தளத்தில் தெளிவாகக் காணலாம்.

அநேகமாக, அதே வயது பிரிவினர், Johnson & Johnson தடுப்பூசியையும்  பெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தடுப்பூசி மருத்துவகம், மருந்தகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடுத்த கட்ட நடவடிக்கையில் பங்கேற்கும் என்று Dubé கூறினார்.

Pfizer-BioNTech தடுப்பூசி 16 முதல் 18 வயதிற்க்குட்பட்டவர்களுக்கு தற்பொழுது வழங்கப்பட மாட்டாது, ஏனனில் கியூபெக் தடுப்பூசி குழுவால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.

மேலும் விபரங்கள் பகிரப்படும், தொடர்பில் இருக்கவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button