news

கனடாவிற்குள்ளும் புகுந்ததா கோத்தா கும்பல்?

யாழ் பல்கலைக்கழகத்தில் மட்டுமே அமைந்திருந்த ஒரே தமிழ் மக்கள் நினைபுத்தூபியும் சமீபத்தில் கோத்தா ஆட்சியின் அழுத்தத்தால் இடித்து அழிக்கப்பட்டதின் பின் உலகளாவிய தமிழ் மக்கள் கொதித்தெழுந்தார்கள். உலகளாவி பல அரசியவாளர்களும் தமது கடும் கண்டனத்தை அதற்கு வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் கனடியப்பிரதமர், பாராளுமனற் உறுப்பினர்கள், ஒன்ராரியோ முதல்வர் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதான நகரங்களின் நகரபிதாக்கள், நகரசபை உறுப்பினர்கள் எனப்பலரும் தமது கடும் கண்டனத்தை கனடாவில் பதிவு செய்தனர். தமிழ் மக்கள் நினைவுத்தூபியை இடித்துவிடுவதன் மூலம் ஒரு இனப்படுகொலை வரலாற்றை அழித்துவிடமுடியாது என்றனர் பலர்.

கனடாவில் தமிழர்கள் அதிகம் வதியும் நகரசபைகளில் ஒன்றான பிராம்டன் நகரசபை ஏகமனதான தீர்மானம் ஒன்றின் ஊடாக தனது பூங்கா ஒன்றில் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை நினைவுத்தூபி ஒன்றைக் கட்ட அனுமதி வழங்கியது உலகளாவி தமிழர்களை மேலும் எழுச்சிகொள்ள வைத்தது. விழித்துக் கொண்டது கோத்தா அரசு. கனடா சிறீலங்கா தூதுரகம் தனது கடும்கண்டத்தை நகரசபைக்கு தெரிவித்தது. சிங்கள கடும்கோப்புக் கும்பல் எதிர்பார்த்தவாறே களத்தில் இறக்கி விடப்பட்டது.

நகரசபைக்கு தமது விண்ணப்பத்தையும் செய்து தமிழருக்கு என்று தனியாக ஒரு தூபி வேண்டாம் தங்களையும் சேர்த்து சமாதானத்தூபி ஒன்று தான் அமைக்கப்படவேண்டும் என்றது. எவ்வாறு தமது தாயகப் பரப்பிலும் தமிழ் மக்கள் இனப்படுகொலை ஒன்றினால் அமைந்த தங்கள் இழப்புகளை நினைவு கூர தடுத்து சமாதானத்தூபி தான் அமையலாம் என்கிறதோ கோத்தா அரசு அதே போன்ற முயற்சி கனடாவிலும் அரங்கேற பிhரம்டன் நகரசபை பிதா மற்றும் உறுப்பினர்கள் கடுப்பாகி கடுமையாக வறுத்து எடுத்துவிட்டனர்.

உங்கள் அமைப்பு எவ்வளவு காலம் இருக்கிறது? என்றால் சமீபத்தில் தான் உருவானது என்றவர்கள் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள்? இதற்கு முன்னர் உங்களைக் கேள்விப்பட்டதே இல்லையே? உங்கள் சொல்லாடல்களும் தூதரக சொல்லாடல்களும் ஒன்றாக இருக்கிறதே! அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன உறவு? கனடாவின் சிறீலங்கா மீதான கடும் வெளிவிவகாரக் கொள்கையை ஏற்றுக் கொள்;கின்றீர்களா? கனடா கொழும்பில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்ததை ஏற்றுக் கொள்கின்றீர்களா? என சரமாரியாக எழுந்த கேள்விகளால் அல்லாடியது கோத்தா கும்பல்.. ஈற்றில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைவதில் எவ்வித மாற்றமும் இல்லை என மீண்டும் ஏகமனதாக அடித்துக் கூறிவிட்டது கனடாவின் பிராம்டன் நகரசபை.

*Cover Photo – Colombo Gazette

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button