news

COVID-19 ஐ குறித்து கியூபெக் அரசாங்கம் விடுக்கும் புதிய ஊரடங்கு மற்றும் வேறு அறிக்கைகள்

COVID-19 பரவுதலை குறைக்கும்  முயற்சியில், கியூபெக் மாகாண அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் வணிகங்களின் மூடுதலை நீடிக்கிறது. எடுத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தை மாதம் 9 ஆம் திகதி தொடக்கம் மாசி மாதம் 8 ஆம் திகதி வரை நீடிக்கும்.

அவையாவன:

• இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை மாகாண ஊரடங்கு உத்தரவு. ஊரடங்கு உத்தரவை மீறினால் $ 1,000 முதல், $ 6,000 வரை அபராதம் செலுத்த வேண்டும்.

• சுகாதாரப் பராமரிப்பு, மனிதாபிமான காரணங்கள் மற்றும் முன்னுரிமைப் பணிகளுக்காக விதிவிலக்குகள் உள்ளன.

• தனியாக வசிக்கும் ஒருவர், தனியாக வசிக்கும் மற்று ஒரே ஒரு நபரை சந்திக்கலாம்.

•  அத்தியாவசியமற்ற வணிகங்கள் மூடப்படும், ஆனால்  நடைபாதையோரம் பெறுதல் (curbside pickup) அனுமதிக்கப்படும்.

• உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், திரையரங்குகள் மற்றும் சிகையலங்கார நிறுவனங்கள் மூடியே இருக்கும்.

• உட்புற விளையாட்டு நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. உடற்பயிற்சி கல்வி வகுப்புகள் மற்றும் பள்ளிகளின் சிறப்பு திட்டங்கள், அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி மற்றும் தொழில்சார் விளையாட்டுகள், பொது சுகாதார அதிகாரிகளின் அனுமதியுடன் நடைபெறலாம்.

• கோவில்களும்,  தேவாலயங்களும் மூடப்படும்.

• ஆரம்பப் பள்ளிகள் ஜனவரி 11 ஆம் திகதி திட்டமிட்டபடி திறக்கப்படும், ஆனால் 5 மற்றும் 6 ஆம் வகுப்பு குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டும்.

• உயர்நிலைப் பள்ளிகள் இன்னும் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டு. ஜனவரி 18 ஆம் திகதியே திறக்கப்படவுள்ளன. உயர்நிலைப் பள்ளிகளில் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.

• குழந்தைகளின் பராமரிப்பு மையங்களும், படிக்க விரும்புவோருக்கு நூலகங்களும் திறந்திருக்கும்.

• இரவு 7:30 மணிக்கு மளிகைக் கடைகள் மற்றும் டிப்பனர்கள் (depanneurs) மூடப்படும். ஆனால் மருந்தகங்கள் மற்றும் எரிவாயு நிலையங்கள் 7:30 மணிக்கு மேலும் திறந்திருக்கும்.

• உணவகங்கள் 7:30 மணிக்குப் பிறகு விநியோகிக்க முடியும்.

• உட்புற பொது கூட்டங்களும் மற்றும் வெளிப்புற சமூகக் கூட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

Credit: Quebec Government

Last Updated : Wednesday January 6th, 2021 – 8:41PM EST

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button