news

இந்த மாதமே, கோவிட்-19 தடுப்பூசிகளைக் கனடா பெறத் தொடங்குகிறது.

கனடாவிற்கு வரவேண்டிய கோவிட்-19 தடுப்பூசிகள் எதிர்பார்த்ததை விட முன்பே இறக்குமதி செய்யப்பட்டுவிடும் என்று கனேடியப் பிரதமர் Justin Trudeau உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் Justin Trudeau அவர்கள் கூறுகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் Pfizer மற்றும் BioNTech எனும் நிறுவனங்களால்த் தயாரிக்கப்பட்ட 249 000 தடுப்பூசிகளைப் பெறுவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படுள்ளதாகாவும் கூறியுள்ளார். அந்த வகையிலே, கனடாவில் பயன்படுத்துவதற்காக Health Canada எனும் அமைப்பின் அங்கீகாரம் பெற்ற தடுப்பூசிகளின் முதற்கட்ட இறக்குமதி, அடுத்த வாரத்தின் ஆரம்பத்தில் வரக்கூடும் என்றும், அவர் கூறியுள்ளார்.

அத் தடுப்பூசியின் செயல்திறன் ஏறக்குறைய 95 சதவீதமாக உள்ளதென்றும் இந்தத் தடுப்பூசியால் முக்கியமான பாதுகாப்புக் கவலைகள் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகின்றது. கனடாவில் இந்தத் தடுப்பூசிகளை 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் பயன்படுத்தலாமென்றும் கூறப்படுகின்றது.

மேலும், 2021இல் இலட்சக்கணக்கான தடுப்பூசிகளின் இறக்குமதிகள் தொடர்ந்தும் வந்து கொண்டே இருக்குமென்றும், இதன் மூலம் கனேடியர்களை விரைவாக பாதுகாக்கலாமென்றும் கூறப்படுகின்றது. அந்த வகையிலே, பங்குனி மாதத்திற்க்குள் 60 லட்சம் தடுப்பூசிகள் கனடாவிற்கு வரக்கூடுமென்றும் கூறப்படுகின்றது.

மேலும், Health Canada மற்றும் கனடாவிலுள்ள அனைத்து மாகாணங்களும் இணைந்து தற்போது நாடு முழுவதும் தடுப்பூசிகளை விநியோகப்படுத்துவதற்கு நகர்ப்புறங்களிலுள்ள 14 தளங்களை தயார்ப்படுத்துவதற்கு செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. அத்தோடு, முதலில் கோவிட்-19 தடுப்பூசிகளை யார் பெற வேண்டும் என்று ​​கனடா அரசு கூறுகையில் முதியவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பழங்குடி சமூகங்களில் உள்ள பெரியவர்கள் போன்றவர்களிற்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருப்பினும், இதைச் சார்ந்த இறுதி முடிவுகள் மாகணங்கள் மற்றும் பிரதேசங்களின் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது.

Related Articles

Back to top button