news

கோவிட்-19 : சிவப்பு நிற அபாய எச்சரிக்கை மேலும் நான்கு வாரங்களிற்கு நீடிக்கப்பட்டுள்ளது

கியூபெக்கில், கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருந்ததால், கடந்த ஐப்பசி மாதம் முதலாம் திகதி தொடக்கம், கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள மொன்றியல், லவால், சவுத்சோர்  போன்ற பல நகரங்களிற்கு, நான்கு வாரங்களிற்கு, அதாவது ஐப்பசி மாதம் 28ஆம் திகதி வரை, சிவப்பு நிற அபாய எச்சரிக்கை விதிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது, இச் சிவப்பு நிற அபாய எச்சரிக்கை, கார்த்திகை மாதம் 23ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நடைப்பெற்ற ஊடக சந்திப்பில், கியூபெக் மாகாணத்தின் முதல்வர் பிரான்சுவா லெகோல்ட் அவர்கள் கூறியதாவது, கடந்த 28 நாட்களும், சிவப்பு நிற அபாய எச்சரிக்கையின் விதிமுறைகளின் மூலம், நாள்தோறும் வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை, சராசரியாக 800 தொடக்கம் 1000 தொற்றுக்கள் என நிலைப்படுத்தமுடிந்தது. எனவே, இன்னும் நான்கு வாரங்களிற்கு இச் சிவப்பு நிற அபாய எச்சரிக்கையை நீடிப்பதன் மூலம், அனைவரும் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைப்பிடித்தால், தொற்றுக்களை குறைக்கமுடியும் என்று நம்பப்படுகின்றது என்றும் கூறியுள்ளார்.

Source: Francois Legault / COVID-19 Oct 26 Rules
Source: Francois Legault / COVID-19 Oct 26 Rules

அந்த வகையிலே, இதுவரை சிவப்பு நிற அபாய எச்சரிக்கையில் விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகளை மேலும் நான்கு வாரங்களிற்கு கடைப்பிடிக்க வேண்டுமென்றும், புதிய விதிமுறையாக, தரம் 9இல் பாடம் கற்கும் மாணவர்கள், வகுப்பறையில் நடைபெறும் வகுப்புக்கள் மற்றும் இணையத்தினூடாக நடைபெறும் வகுப்புக்களென மாறி மாறி வகுப்புகளிற்கு சமூகம் அளிக்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button