news
கொவிட்-19 நோய்த்தொற்று எச்சரிக்கை செயலியை தரவிறக்கம் செய்துவிட்டீர்களா?

கொவிட்-19 நோய்த்தொற்று எச்சரிக்கை செயலியை தரவிறக்கம் செய்துவிட்டீர்களா?
உங்களையும், உங்கள் உறவுகளையும், எமது சமுகத்தையும் பாதுகாக்கும் பொருட்டு எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள கொவிட்-19 நோய்த்தொற்று எச்சரிக்கை செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்கு நான் உங்கள் அனைவரையும் ஊக்குவிக்கிறேன். 4.5 மில்லியனுக்கும் மேற்பட்ட கனடிய மக்கள் ஏற்கனவே இதனைத் தரவிறக்கம் செய்துள்ளனர்.
இதனை ஆப்பிள் மற்றும் கூகிள் செயலிக் களஞ்சியங்களில் இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்பதுடன், உங்கள் பாதுகாப்புக்கும், தனிப்பட்ட தகவல்களின் இரகசியம் காப்பதற்கும் இது உத்தரவாதமளிக்கின்றது.
Download COVID Alert today