news

கோவிட்-19 : செம்மஞ்சள் எச்சரிக்கை வட்டாரத்தில் (Orange zone alert) என்னென்ன விடயங்கள் தடை செய்யப்பட்டுள்ளது ?

செம்மஞ்சள் வட்டாரத்தை எட்டியுள்ள நகரங்கள்: மொன்றியல், கியூபெக் சிற்றி, சோடியர்-அப்பாலாஷ்

இதன் பொருள் என்ன?

தனிப்பட்ட கூட்டங்கள் : தனிப்பட்ட ரீதியில் வெளியில் அல்லது வீட்டின் உள்ளே நடக்கும் கூட்டங்களில் அதிகபட்சம் ஆறு நபர்கள் அல்லது இரண்டு குடும்பங்கள் மட்டுமே ஒன்றுகூட முடியும். உதாரணமாக, இரண்டு வெவ்வேறு குடும்பங்களில் நான்கு நான்கு நபர்கள் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தால், நான்கு நபர்கள் கொண்ட அவ் இரண்டு குடும்பங்களும் ஒன்றுகூட முடியும். இவ் மாகாணத்தின் வேறு பகுதியில் வாழும் மக்கள், பச்சை அல்லது மஞ்சள் எச்சரிக்கை வட்டாரத்தில் அடங்குவதால், அவர்களால் பத்து நபர்கள் இணைந்து ஒன்றுகூட முடியும்.

பொது கூட்டங்கள் : வெளியிடங்களிலோ, பூங்காக்களிலோ அல்லது வாடகைக்கு எடுக்கும் மண்டபகங்ளிலோ, வழிபாட்டு தளங்களிலோ நடக்கும் எந்தவிதமான  நிகழ்வாக இருந்தாலும், அதிகபட்சம் 25 நபர்கள் மட்டுமே ஒன்றுகூட முடியும். மாகாணத்தின் மிகுதி நகரங்களில் 50 நபர்கள் ஒன்றுசேர முடியும்.

பொது மண்டபங்கள் : கச்சேரி அரங்கங்கள் மற்றும் திரையரங்கங்கள் அனைத்திலும் அதிகபட்சம் 250 நபர்கள் இருக்க முடியும். ஆனால், அவர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தவாறு, கதைப்பதை தவிர்த்து, ஊழியர்களின் மேற்பார்வையின் கீழ் இருக்க வேண்டும். அவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை. இச் சட்டமானது கியூபெக் மாகாணத்தின் அனைத்து நகரங்களுக்கும் பொருந்தும்.

மதுக்கூடங்கள் மற்றும் சூதாட்டத்தளங்கள் : அதிகபட்சம் ஆறு நபர்கள் மட்டுமே ஒரே மேசையில் அமர முடியும். பிற்பகல் 11 மணிக்கு பின்பு மது அல்லது உணவு விற்கப்படக்கூடாது. அத்தோடு 12 மணிக்கு இவ் இடங்கள் மூடப்பட வேண்டும். கட்டாயமாக அங்கு செல்பவர்களின் பெயர்  விபரங்கள் வாங்கப்படும். பச்சை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை வட்டாரங்களில் வாழும் மக்கள், பத்து நபர்கள் ஒரே மேசையில் இருக்கலாம். அத்தோடு, மதுக்கூடங்கள் முற்பகல் 1 மணி வரை திறந்திருக்க முடியும்.

உணவகங்கள் : மதுக்கூடங்கள் போலவே அதே சட்டத்திட்டங்கள் உள்ளன. ஆனால், உணவகங்களுக்கு எந்தவித நேரக்கட்டுப்பாடுகள் இல்லை.

இப் பகுதிகளிலிருந்து வேறொரு பகுதிக்கு பயணிப்பதை அவசியமல்லாவிட்டால் தவிர்க்க சொல்லப்படுகின்றது. ஆனால், வேறு நகரங்களில் இது அனுமதிக்கப்படுகின்றது.

முதியவர் இல்லம் : நீண்ட கால பராமரிப்பு இல்லங்களின் மனிதாபிமான காரணங்களிற்காக உறவினர் மற்றும் நண்பர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அத்தோடு, உதவியாக இருக்க விரும்பும் பராமளிப்பாளர்களும் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் சட்டத்திட்டங்கள் அறிவிக்கப்படும். முதியோர் இல்லங்களில், ஒரு வாடகை அறையில், ஆறு நபர்கள் மட்டுமே இருக்க முடியும்.

சிவப்பு எச்சரிக்கைக்கு போனால் என்ன நடக்கும்?

சிவப்பு எச்சரிக்கையானது இவ் எச்சரிக்கை ஒழுங்கின் இறுதி கட்டம். இந்த கட்டத்தை அடைந்தால், மேலும் கட்டுப்பாடுகளும் சட்டங்களும் விதிக்கப்படும். இதன் மூலம் அவசியமற்ற அனைத்து செய்ற்பாடுகள், நிகழ்வுகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இக் கட்டுப்பாடுகள் மூலம் முடிந்தவரை மீண்டும் ஓர் பொது தனிமைப்படுத்தலை தவிர்க்க முடியும் என்று நம்பப்படுகின்றது.

தகவல்கள் பெறப்பட்ட இணையம் : Quebec Government

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button