Editorialnews

ஈழ தமிழர்களுக்கான நீதி வேண்டி கனேடியர்களின் நெடுநடைப் பயணம்

நான்கு கனேடிய தமிழர்கள் நீண்ட நெடுந்தூரம் நீதிக்கான நடை பயணத்தை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழ தமிழர்களுக்காக August 31, 2020 இல் Brampton நகரில் இருந்து ஒட்டாவா நோக்கி ஆரம்பித்தனர். அவர்களுக்கு ஆதரவாக September 7 ஆம் நாள் Montreal இலிருந்து மூன்று தமிழ் கனேடியர்கள் ஒட்டாவா நோக்கி தமது நடை பயணத்தை தொடங்கினர். கடினமான பாதையில் கால்கள் வீங்க பாதங்கள் வேக அவர்களின் நீதிக்கான நடை பயணம் தொடர்ந்தது. மக்களின் ஆதரவு வழி நெடுக இருந்தது. கனேடிய பூர்வீக குடிமக்கள் தமது ஆதரவை தெரிவித்திருந்தனர். வழியெங்கும் தமிழரல்லாத வேற்றின மக்கள் ஈழ தமிழருக்கு நடந்த அநீதிகளை அறிந்துகொண்டனர். சிலர் நடைபயணம் செய்தோருக்கு COVID19 காலப்பகுதியிலும் பாதுகாப்பான முறையில் தேநீர் வழங்கி நன்றி பகிர்ந்தனர். கனடிய தமிழர்கள் தன்னார்வமாக நீண்ட தூரம் நடந்தோருக்கு உறுதுணையாக அவர்களுடன் வழியெங்கும் சென்றனர். கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் நடைப்பயணத்திற்கு நிறையவே இருந்தது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி தமிழருக்கு மட்டுமன்றி உலகின் பலபாகங்களில் எழும் குரல் அதானல் தான் ஐநா August 31 ஐ அதற்கான நாளாக அறிவித்திருந்தது.

 
September 13 ஆம் நாள் ஒட்டாவாவில் இரு நகரங்களிலிருந்தும் இருந்து வந்த அணியினர் இணைந்து கொண்டனர். ஒட்டாவாவில் உள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் முது தமிழர் அமைப்பு அடங்கலாக ஒன்பது தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து நடை பயணம் மேற்கொண்டோரின் உயரிய நோக்கை நன்றியுடன் பாராட்டி Ottawa Vincent Massey Park இல் ஒன்று கூடலை செய்து கனடிய தமிழரின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். கனடாவின் Toronto, Montreal Ottawa எனும் மூன்று நகரிலிருந்தும் தமிழர்கள் ஒன்றிணைந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழ தமிழருக்காக புலம் பெயர் தமிழர்கள் நீதி கிடைக்கும் வரை ஒன்றாக ஓயாது இருப்போம் என்ற செய்தியை சொல்லி நின்றனர். Brampton இல் இருந்து நடைபயணம் தொடங்கிய தமிழர்களின் ஒரு குறிக்கோள்களில் ஒன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதி விடயத்தில் தமிழர்களை இணைத்தல். தமிழ் ஊடகங்கள், எல்லா கட்சிகளிலும் இருக்கும் கனடிய தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் ஈழத்தில் இருக்கும் தமிழ் அரசியல் வாதிகள் எல்லோருமே இணைந்து நீதி வேண்டி குரல் கொடுத்திருந்தனர். கனடிய தமிழ் அமைப்புகள் எல்லோருமே ஆதரவுகளை தெரிவித்திருந்தனர். September 13 அன்றே தமிழரை ஒன்றாக இணைத்தல் என்ற அவர்களின் குறிக்கோள் நிறைவேறியிருந்தது.
 
 
September 14 ஆம் நாள் ஓட்டாவா பாராளுமன்றை நோக்கி Montreal, Ottawa Toronto மற்றும் பல பாகங்களிலிருந்தும் நூறுக்கணக்கான கனேடியர்கள் Vincent Massey Park இலிருந்து தொடங்கி Carleton University வழியாக கனடிய பாரளுமன்றத்தை அடைந்தனர். Carleton University 2018 இல் ஏழு கனேடிய தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து நடாத்திய இரண்டாம் சர்வதேச தமிழர் தாயகம் மற்றும் சிறிலங்காவின் தமிழின அழிப்பு எனும் தலைப்பிலான மாநாடு முப்பதுக்கு மேற்பட்ட ஆய்வு அறிக்கைகள் விவாதிக்க பட்டு உலகில் உள்ள 21 தமிழ் அமைப்புகள் ஒன்றாக தீர்மானம் நிறைவேற்றிய இடமாகும். இதே பல்கலை கழகத்தில் தான் 1999 இல் தமிழரின் அரசியல் ஒற்றுமையை கூறும் முதலாம் சர்வதேச மாநாடு நடைபெற்றிருந்தது. தமிழர்களின் ஒற்றுமை காலத்திற்கு காலம் சிதைவடையும் போதெல்லாம் சில நிகழ்வுகள் தமிழர்களை இணைக்கும். அந்த நான்குபேர் தொடங்கிய ஒற்றுமை குரல் பாராளுமன்ற முன்றலில் தெளிவாக உலகுக்கு COVID19 கட்டுப்பாடுகளை முழுமையாக பேணியபடி உரத்து கூறப்பட்டது. உலகு தமிழர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய நீதியை புறம் தள்ளி செல்ல முடியாது என்ற செய்திதான் அது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வரை தமிழர்கள் தொடர்ந்து ஓயாது குரல் கொடுப்பர் என்ற செய்தியை உலகுக்கு சொல்வது நடைபயணம் மேட்கொண்டோரின் இன்னும் ஒரு குறிக்கோள்.
 
 
இந்த செய்தியை பல கனேடிய ஊடகங்கள் September 14 இரவே ” Activists urge Trudeau government to act on disappearances in Sri Lanka” எனும் தலைப்பில் காவி வந்தன. CTV, Global and Mail, Canadian Press, The Star, The Review என பல பிரபல கனடிய ஆங்கில ஊடகங்கள் கனடிய பிரதமருக்கு அளிக்கப்பட்ட சிறிலங்காவின் இறையாண்மையை விசாரணைக்கு வழிவிட வேண்டி நீக்க வேண்டும் என்ற வேண்டுகோள் குறித்து செய்தி வெளியிட்டிருந்தன. கனடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த சில வருடங்களாக சிறிலங்காவின் கட்டளை இராணுவ அதிகாரிகள் மேல் Magnitsky Act சட்டத்தை பாவித்து முதல் கட்டமாக பயண தடைகளை போட வேண்டும் என கூறிவருவதும் குறிப்பிட தக்கது. அமெரிக்க அரசு சிறிலங்கா இராணுவ தலைவர் மேல் சில மாதங்கள் முன்பு பயணத்தடை செய்திருந்தது. இத்தகைய ஆரம்ப கட்ட செயல் தமிழருக்கு என்றோ ஒருநாள் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை கொடுக்கும். கனடிய வெளியுறவு அமைச்சரும் பாராளுமன்ற கேள்வி பதிலின் போதுஅத்தகைய பயண தடை சிறிலங்கா இராணுவ தலைமை மீது போடுவது சாத்தியம் தான் என கூறியிருந்தார்.
 
 
ஈழ தமிழர்கள் ஆயிரக்கணக்கில் சிறிலங்காவின் இனஅழிப்பில் காலத்திற்கு காலம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். 2009 இல் போர் முடிந்த பின்னரும், ஐநா முதல் பல உலக அரசுகளுக்கு தெரிந்தே ஆயிரக்கணக்கில் தமிழர்கள் சிறிலங்கா இராணுவ பிடியில் இறுதியாக தமிழ் உறவுகள் கண்டனர். அதில் பல தமிழர்கள் கொல்லப்பட்ட காணொளி சாட்சிகளாக ஐநாவில் உள்ளது. மேலும் பலருக்கு என்ன நடந்தது என்பதே தெரியவில்லை. தமது பிள்ளைகளை சிறிலங்கா இராணுவம் கொண்டு சென்றபோது பார்த்திருந்த பெற்றோர்கள் பல அடுக்குமுறைகளுக்கு நடுவிலும் தொடர்போராட்டங்களில் ஈடு படுகின்றனர். அதில் அறுபதுக்கு மேற்பட்டோர் கடந்த பத்து வருடத்தில் இறந்துள்ளனர். சிலர் சிறையில் அடைக்கப்பட்டும் உள்ளனர். அதீத அடக்குமுறை அவர்கள் மீள் இன்றும் உள்ளது. இதை ஈழத்தில் மட்டக்கிளப்பு பாராளுமன்ற உறுப்பினர் தெளிவாக கூறியுள்ளார். புலம் பெயர் தமிழர்கள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டிய தேவை பற்றியும் கூறியிருந்தார். சிறிலங்காவின் மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர் குற்றம் மற்றும் தமிழ் இனஅழிப்பு குற்றங்களை புறம்தள்ளி அதை மறந்து உலகம் பயணித்து செல்ல முடியாது. அப்படி பயணித்தால் ஈழத்தில் தமிழரின் இருப்பு முழுமையாக அழிந்து விடும். இந்த நீதிக்கான குரல்கள் புலத்தில் இருக்கும் வரை தான் ஈழத்தில் தமிழரின் குறைந்த பட்ச இருப்பும் இருக்கும்..
 
– வேல்

Activists urge Trudeau government to act on disappearances in Sri Lanka – THE STAR

Canadian MP calls for Magnitsky sanctions on Sri Lanka  – TAMIL GUARDIAN

Activists urge Trudeau government to act on disappearances in Sri Lanka  –  MELITA NEW ERA

International Day of the Victims of Enforced Disappearances, 30 August – UNITED NATIONS

Walkers seek help to find missing people in Sri Lanka – THE REVIEW

Support of Tamil diaspora important in achieving justice – M.P. Shanakiyan Rasamanickam – MONTAMIL

Activists urge Trudeau government to act on disappearances in Sri Lanka – THE GLOBE AND MAIL

Activists urge Trudeau government to act on disappearances in Sri Lanka – CTV NEWS

Activists urge Trudeau government to act on disappearances in Sri Lanka – 680 NEWS

The Walk for Justice for Victims of Enforced Disappearance Goes Through Alderville First Nation – TODAY’S NORTHUMBERLAND

A Walk To Keeping The Hope Alive – COLOMBO TELEGRAPH 

*** The opinions expressed in this publication are those of the authors. They do not purport to reflect the opinions or views of the Montamil.ca or its members. ***

Vel Velauthapillai

Canadian Tamil Activist who advocates for Eelam Tamil's right to self-determination and wider recognition of Sri Lanka's genocide against Tamil.

Related Articles

Back to top button