news

தமிழ் இன அழிப்பு அறிவூட்டல் வாரம் தொடர்பான சட்டவரைவு: முதல்வர் டக் ஃபோர்ட் ஆதரவு

செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2020 அன்று, ஒன்ராறியோ சட்டசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம், ஒன்ராறியோவின் முதல்வர் டக் ஃபோர்ட் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அரிஸ் பபிகியன் ஆகியோருடன் ஊடக சந்திப்பொன்றை நிகழ்த்தினார்.

அதன்போது, முதல்வர் அவர்கள் சில முக்கியமான உள்ளூர் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

தமிழர் இன அழிப்பு தொடர்பான சட்ட வரைபு – 104

தமிழ் இன அழிப்பு அறிவூட்டல் வாரம் தொடர்பான  சட்டவரைவு – 104இன் தற்போதைய நிலை குறித்து தமிழ் ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது, முதல்வர் அவர்கள் மேற்படி சட்டவரைபை முழுமையாக ஆதரிப்பதாகவும், அதனை நிறைவேற்றுவதாகவும் உறுதி அளித்தார்.  அத்துடன், முதல்வர் அவர்கள் தமிழ் சமூகம் எதிர்கொண்டுவரும் பேரதிர்ச்சியையும் பாதிப்பையும் தான் புரிந்துகொண்டுள்ளதாகக் கூறினார். ஒன்ராறியோ மானிலத்தில் வாழும் அனைத்து மக்களுடனும் தமிழ் மக்கள் தமக்கு நடைபெற்ற அனுபவங்களையும் கதைகளையும் பகிர்ந்துகொள்வதன் முக்கியத்துவத்தையும் அவர் அங்கு குறிப்பிட்டார். இம்மாகாணத்திற்கும் நாட்டிற்கும் தமிழ் சமுகம் செய்த அர்ப்பணிப்புகள் பற்றியும் அவர் அங்கு எடுத்துரைத்தார்.

போக்குவரத்து
ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக ஸ்காபரோ பகுதி போக்குவரத்துத் துறைக்கான கட்டமைப்புகளில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சுட்டிக்காட்டினார். மேலும் அவர் குறிப்பிடும்போது, 650,000 இற்கும் மேற்பட்ட ஸ்கார்பாரோ வாழ் மக்கள் போதிக போக்குவரத்து வசதிகள் இன்றி உள்ளனர் என்றும் தெரிவித்தார். எனவேதான் எமது அரசாங்கம் நிலக்கீழ் தொடருந்து சேவையை நீட்டித்து, ஸ்காபரோவில் புதிய மூன்று தொடருந்து தரிப்பிடங்களை நிறுவுவதற்கான திட்டத்தை வழங்கி அங்கு வசிக்கும் மக்களுக்கு இலகுவான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது.

ஸ்காபரோவுக்கான சுகாதார திட்டம்

ஸ்கார்பாரோ பொது மருத்துவமனையில் நோயாளிகள் காத்திருக்கவேண்டிய நேரம் மிக நீண்டதாக உள்ளது பற்றி முதல்வரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அதனை இல்லாமல் ஆக்குவதற்கு எமது அரசாங்கம் ஸ்காபரோ சுகாதாரக் கட்டமைப்பிலும், மானிலத்தில் உள்ள பிற மருத்துவமனைகளிலும் மில்லியன் கணக்கான டொலர்களை முதலீடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஸ்காபரோ வாழ் மக்கள் தங்களுக்குத் தேவையான சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்குத் தகுதியுடையவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன், எதிர்காலத்தில் ஸ்காபாரோவில் ஒரு புதிய மருத்துவமனையை உருவாக்க முடியும் என தான் நம்புவதாகவும் கூறினார்.

பள்ளிகள் மீண்டும் ஆரம்பிப்பதற்கான திட்டம்

பாடசாலைகள் மீண்டும் செப்டெம்பரில் ஆரம்பிப்பதற்கு வேண்டிய எமது அரசாங்கத்தின் திட்டம் கல்வி அமைச்சர்  ஸ்டீபன் லெஸ்சே தலைமையில்

Related Articles

Back to top button