news
மொன்றியலிலுள்ள ஒரு வீட்டில் ஏற்றப்பட்ட தீ விபத்தில் சிக்கிய 12 வயது தமிழ் சிறுமி அகால மரணமடைந்தார்
லசாலில் வீட்டு தீவிபத்தில் 12 வயது தமிழ் சிறுமி பலி !

செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் 12 வயது நிரம்பிய சிறுமி வீட்டின் அடித்தளத்தில் சிக்கி உயிரிழந்தார்.
மொன்றியல் தீயணைப்பு படையினர் அந்தச் சிறுமியை வீட்டிலிருந்து வெளியே கொண்டுவந்து சுமார் 20 நிமிடங்கள்வரை முதலுதவி செய்த பின்னர் வைத்தியசாலைக்கு அந்தச் சிறுமி கொண்டுசெல்லப்பட்டார்.
தீக்காயங்களாலும் மற்றும் புகையை சுவாசித்ததாலும் அந்தச் சிறுமி உயிரிழந்துள்ளார் என்பதனை மருத்துவசாலை வட்டாரம் பதினொரு மணியளவில் உறுதிசெய்துள்ளது.
வீட்டில் ஸ்மோக் டிடெக்டர் இருக்கவில்லை என்பதை தீயணைப்பு குழுவினர் உறுதிசெய்துள்ளனர்.
இச்சம்பவம் நிகழ்த வேளையில் உயிரிழந்த சிறுமியின் 18 வயது நிரம்பிய சகோதரியும் மற்றும் 10 வயது நிரம்பிய சகோதரனும் வீட்டில் இருந்துள்ளார்கள். அனால் அவர்கள் இருவரும் தீயிலிருந்து தப்பி வீட்டைவிட்டு வந்து பாதுகாப்புக்காக பக்கத்து வீட்டுக்காரரிடம் சென்றுள்ளார்கள்
அதேவேளை
தனது ஒரு பிள்ளை இறந்துவிட்ட செய்தியை அறிந்த தாய் வேலையிலிருந்து வீட்டிற்கு விரைந்து வந்துள்ளார்.
இந்த சம்பவத்தின் காரணமாக அவரது அயலவர்களால் அழைக்கப்பட்டு வீடு திரும்பியதும் அதிர்ச்சி அடைந்த நிலையிலிருந்தார் என்றும் மொன்றியல் பொலிசாரான மத்தியூ ஜிறவித் தெரிவித்தார்.ஆகவே தாயார் அவசர சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.
தீயணைப்புப் படையினர் அங்கு வந்தபோது எச்சரிக்கை மணி ஒன்றில் தவறிருந்ததாகவும்
அல்லது தொழிற்படாது இருந்ததாகவும் தெரிவித்தனர்.
ஸ்மோக் டிடெக்டர் கருவி வீட்டில் இல்லையா அல்லது அது வேலை செய்யவில்லையா என்பதை தீயணைப்பு படையினர் அங்கே வந்தவுடன் அவர்களால் உறுதி செய்ய முடியவில்லை.
இறுதியில் அங்கு புகை எச்சரிக்கை மணி பொருத்தப்பட்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்கள். தீயணைப்பு படையினர் மொன்றியலில் உள்ள அனைத்து வீட்டுரிமையாளர்களுக்கும் வீட்டின் அனைத்து தளங்களிலும் புகை எச்சரிக்கைக்கருவி பொருத்தப்பட்டு அவை ஒழுங்காக வேலைசெய்கின்றனவா என்று பரிசீலிக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தச் செய்தி முக்கியமானதெனவும் அதனை மீண்டும் ஒருதடவை மீள் வலி யுறுத்துவதாகவும் திரு. லாறன்ற் அவர்கள் கூறினார்.