news

அமைச்சர் ஸ்டீபன் லெச்சே தமிழ் மக்களுக்கு தனது ஆதரவை அளித்துள்ளார்

தமிழ் இன அழிப்பு அறிவியற் கிழமைக்கான சட்டவரைவு-104 க்கு ஒன்ராறியோ மாகாண கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெச்சே தமிழ் மக்களுக்கு தனது ஆதரவை அளித்துள்ளார். தமிழர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன், பீல் பிராந்திய கல்விச்சபை மே 18ஆம் திகதி தமிழ் இன அழிப்பிற்கு கவலை தெரிவித்து வெளியிட்ட அதன் அறிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தி வெளியிட்ட கடிதத்துக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனை மீண்டும் கூறியுள்ளார்.

அமைச்சர் ஸ்டீபன் லெச்சே அவர்கள் தனது 'டுவிட்டர்' பக்கத்தில்
பின்வருமாறு தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்:

சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்கள் கொண்டுவந்த
தமிழ் இன அழிப்பில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூருவதற்கான
சட்டவரைபுக்கு நான் எனது முழு ஆதரவைத் தெரிவித்து
பேசியிருந்தேன்.

எமது உள்நாட்டு விவகாரங்களில் (ஒன்ராறியோவில் வாழும் தமிழ்
மக்களுக்கான) வெளிநாட்டு அரசாங்கங்கள் தலையிட நாம் ஒருபோதும்
அனுமதிக்க முடியாது. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக
மாற்று நடவடிக்கைகளை செயற்படுத்த முடியாது.
வாதங்களை முன்வைத்தமைக்காக சமூகத்திலுள்ள அனைவருக்கும்
நன்றி என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close