news

COVID-19 : கியூபெக் சைவமகா சபை விடுக்கும் அறிவித்தல்

கொறொனா வைரஸ் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நேரத்திற்கு நேரம், பல புதிய தகவல்கள் இது பற்றி வந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் மொன்றியல் திருமுருகன் ஆலயமும்  தமது அடியவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மத்திய மானில அரசுகளின் ஆலோசனைகளுக்கு அமையவும் ஏனைய மத தலங்கள் மற்றும் பொது அமைப்புகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டும் சில பாதுகாப்பு முறைகளை அமுல்படுத்தியிருக்கிறோம்.

– குருமார்கள் அடியவர்களுக்கு தீபம் கொடுப்பது, வீபூதி, சந்தனம், குங்குமம் மற்றும் தீர்த்தம் கொடுப்பதையும் தவிர்க்கப்படும்

– கோவிலில் சமைத்து பிரசாதம் கொடுப்பதையும் மறுஅறிவித்தல் வரை  நிறுத்திவைக்கப்படும்

–  முகாமைத்துவம் மேலதிக சுகாதாரம் பேணுவத்தற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது

– கலை நெறிக் கல்விக் கழகம் வரும் ஞாயிற்றுக்கிழமை (2020-03-15) அன்று மூடப்பட்டிருக்கும்.

உலகமே கொறொனா வைரஸ் பற்றி கவலை கொண்டிருக்கும் இவ்வேளையில் அடியவர்களின் ஒத்துளைப்பை சபை வேண்டி நிற்கிறது.

மேலும் முதியவர்கள், மற்றும் இருமல், தும்மல், உடல் நலக்குறைவு உள்ளவர்கள் ஆலயத்திற்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்கவும்.

பக்தியுடன்
நா வாகீசன் (செயலாளர்)
கியூபெக் சைவ மகா சபை
+1 514-683-8044

Related Articles

Back to top button