ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்றய தினம் ஒட்டவாவிலுள்ள கனடிய பாராளுமன்றத்தில்..!
கனடாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியில் போட்டியிட்டு ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2015 தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியிலேயே லிபரல் கட்சி சார்பில் மீண்டும் ஹரி ஆனந்தசங்கரி போட்டியிட்ட அவர் 62.3 வீத வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றார்.கனடாவில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்றதுக்கு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களில் கனடாவில் அதிகூடிய வாக்கு விதாசாரத்தில் வெற்றிபெற்றார் என்பதும் குறிப்பிடதக்கது.
பாராளுமன்றதுக்கு தெரிவான ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் சத்தியப் பிராமணம் செய்கின்ற நிகழ்வு இன்றய தினம் ஒட்டவாவிலுள்ள கனடிய பாராளுமன்றத்தில் மாலை 3.30 மணியளவில் நடைபெற்றது, சத்திய பிராமண நிகழ்வில் பல நூற்று கணக்கான ஆதரவாளர்கள்,புத்திஜீவிகள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகாவியளார்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் தனக்கு வாக்களித்த ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதி மக்களுக்கும் மற்றும் தனது வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு தனது பதவிக்காலத்தில் மனித உரிமைக்காக குரல் கொடுக்க போவதாகவும் மற்றும் உலகெங்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.