கிளி/பன்னங்கண்டி இ.த.க.பாடசாலையில் திறன்வகுப்பறை திறப்புவிழா

0

கிளி/பன்னங்கண்டி இந்து தமிழ்க்கலவன் பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திறன் வகுப்பறைத் திறப்புவிழா கடந்த 2019.07.30 ஆம் திகதி, புதன்கிழமை,. மு.ப.9.00 மணிக்கு, பாடசாலை முதல்வர் திருமதி.லோகநாகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
கனடாவின் மொன்றியல் மாநகரிலுள்ள தமிழ் உறவுகளால் உருவாக்கப்பட்ட ‘வன்னி வளத்துக்கான புதிய சந்தர்ப்பங்கள்’ நிறுவனத்தினரின் நிதியுதவியோடு புதிதாக அமைக்கப்பட்ட திறன் வகுப்பறையை மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கும் மேற்படி நிகழ்வில் முதன்மை விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்சிவஞானம் சிறீதரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக மேனாள் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் தம்பிராசா குருகுலராசா, பிரதிக்கல்விப் பணிப்பாளர் பாலசிங்கம் வாசுதேவன், ஆரோபண இளைஞர் இல்லத்தின் இயக்குனர் வணபிதா யூட் அமலதாஸ் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் அ.இரவீந்திரன், ஓய்வுநிலை அதிபர்.க.இராஜேந்திரம், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் அ.சத்தியானந்தன் ஆகியோரோடு, அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

 

 

Share.

About Author