பரிசின் நோட்ரே-டாம் தேவாலயத்தை மீள புனரமைப்பதற்கான 100 மில்லியன் யூரோ நிதியை வழங்கிய பிரான்ஸ் பில்லியனர்.

0

தீவிபத்திற்கு உள்ளாகிப் பெரும் சேதமடைந்துள்ள பரிசின் நோட்ரே-டாம் தேவாலயத்தை மீள புனரமைப்பதற்கான100 மில்லியன் யூரோ நிதியை வழங்கிய பிரான்ஸ் பில்லியனர் .

நோத்ர-தாம் தேவாலயத்தின் பல நூற்றாண்டுகளைக் கடந்த, பிராதான கோபுரம் இடிந்த வீழ்ந்த காட்சி பிரான்சில் மட்டுமல்ல, உலகம் எங்கும் உள்ள மக்களின் நெஞ்சங்களைப் பதைபதைக்க வைத்துள்ளது. 400 இற்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர் பெரும் முயற்சியில் ஈடுபட்டும்,தேவாலயத்தைக் காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்துள்ளது’ எனப் பிரான்சின் உள்துறை அமைச்சர் லொரோன் நூனெஸ் (Laurent Nuñez) பிரகடணப்படுத்தி உள்ளார். தீவிபத்திற்கு உள்ளாகிப் பெரும் சேதமடைந்துள்ள பரிசின் நோட்ரே-டாம் தேவாலயத்தை மீள புனரமைப்பதற்கான100 மில்லியன் யூரோ நிதியை வழங்க பிரான்ஸ் பில்லியரான பிரான்காய்ஸ் -ஹென்றி அவர்கள் முன்வந்துள்ளார்.

இதற்கான அறிவிப்பை விபத்து நடந்து சில மணிநேரத்தில் அறிவித்துள்ளது பிரான்ஸ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது , Maurice de Sully பேராயரின் பெரும் அழுத்தத்தின் பேரில், போப்பாண்டவர் அலெக்சாண்டர் III முன்னிலையில் 1163 ஆம் ஆண்டு இந்தத் தேவாலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது தொடர்ச்சியாக இரண்டு நூற்றாண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ச்சியாக இந்தத் தேவாலயம் பல சோதனைகளைச் சந்தித்தாலும், பரிஸ் மக்களின் சாட்சியமாக எட்டு நூற்றாண்டுகளைக் கடந்து வந்துள்ளது. இதற்கு முன்னர், முக்கிய தேவாலயாக விளங்கிய Saint-Etienne தேவாலயம், பெருந்திரளான மக்களை உள்ளடக்க முடியாமல் திணறிய நிலையில், பெருந்தொகையான மக்கள் வாழ்ந்து வந்த பரிஸ் நகரத்தில் நோத்ர-தாம் தேவாலயத்தைக் கட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டது. 1200 ஆம் ஆண்டில் இருந்து, ஐரோப்பாவின் மிகப்பெரிய நகரமாக விளங்கிய பரிஸ் நகரத்தில், 200.000 மக்கள் வாழ்ந்து வந்தனர். இது மிகவும் பெரிய சனத்தொகை என்பதால் இது இங்கு கட்டப்பட்டது. 1804 இலருந்து, அதாவது, நெப்போலின் காலத்தில் இருந்து மிகவும் பிரபல்யம் அடைந்த இந்தத் தேவாலயம், இன்று மில்லியன் கணக்கிலான உல்லாசப் பயணிகளை ஈர்த்து வந்துள்ளது.

Share.

About Author