நிகழ்வுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி முள்ளிவாய்க்கால் வளாகத்திற்கு பூரணம் போலீஸ் பாதுகாப்பு

0

தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் வருடம்தோறும் மே மாதம் 18 ம்  திகதி தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது

அந்தவகையில் இம்முறை தமிழினப் படுகொலை நினைவேந்தல்10 ம்  ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று காலை பத்து முப்பது மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்

தில் இடம்பெற இருக்கின்றது

அந்த வகையிலே நினைவேந்தல் வளாகத்தை சூழ 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவதற்காக வருகை தந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது

அதோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான  அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் நிகழ்வுக்காக மக்கள் குறித்த  இடத்திற்கு வருகை தந்து கொண்டிருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது

Share.

About Author