Kalvichapai 2017 – Quebec Tamil Education Board Annual Exam

0

மொன்றியலிலுள்ள பல தமிழ்ப் பாடசாலைகள் ஒன்றிணைந்து கியுபெக் தமிழ் கல்விச்சபையை உருவாக்கி கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ் மொழித்திறன் பரீட்சையை நடாத்தி வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இவ்வருடப் பரீட்சையை கடந்த 17/06/2017 அன்று சிறப்பாக நடாத்தியது. இப் பரீட்சையில் 400ற்கும் அதிகமான மாணவர்கள் மொன்றியல் தழுவியரீதியில் இளமழலையில் இருந்து தரம் 10 வரைக்குமான பிரிவுகளில் தேர்வு எழுதினார்கள். பரீட்சையை சிறப்புற நடாத்துவதற்கு உதவிய ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தொண்டர்கள் அனைவருக்கும் கியுபெக் தமிழ்க் கல்விச்சபை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது. மேலும் இவ்வருடப் பரீட்சையை முகப்புத்தகத்தில் நேரலையில் கொண்டு வந்த மொன்றியலில் சிறப்பான ஊடக சேவையை வழங்கிவரும் MonTamil நிறுவனத்தினருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

 

Share.

About Author