தமிழின அழிப்பு அறிவியற் கிழமை – விஜய் தனிகாசலம்

0

ஒன்ராறியோ சட்டமன்றத்தில் தமிழினப்படுகொலை பற்றிய அறிவியற் கிழமை ஒன்றை சட்டமூலம் ஆக்குவதற்கான பிரேரணை ஒன்று மே மாதம் 6 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழ் மக்களில் பெரும் தொகையான தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் இடமாக ஒன்ராறியோ விளங்குகின்றது.
ஒன்ராறியோவின் வளர்ச்சியில் தமிழ் மக்கள் சமூகமானது தனது பங்களிப்பை பல்வேறு வழிகளில் வழங்கி வருகின்றது.

இலங்கையில் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசினால் நடாத்தப்பட்ட இனப்படுகொலையானது தமிழ் சமூகத்தை ஆழமாக பாதித்துள்ளது.

சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இவ் இனவழிப்பு நடைபெற்று 10 ஆண்டுகள் நெருங்கி வரும் நிலையில்
தமிழினப்படுகொலையை அங்கீகரிக்க கோருவது மிக முக்கியமானதாகும்.

இன்றைய உலகை மாற்றுவதில் கல்வி மிக முக்கியமான ஒன்றாகப் பயன்பட்டு வருகின்றது.
இவ்வகையில் தமிழினப்படுகொலையை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், தமிழினப்படுகொலை உட்பட உலகில்
நடைபெற்ற பிற இனங்கள் மீதான படுகொலைகள் பற்றிய விழிப்புணர்வைத் தக்கவைப்பதற்கான எமது கூட்டு
விருப்பத்தை உறுதிப்படுத்தும் எனவும் நம்புகின்றோம்

இப்பிரேரணையானது பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றது.

1. இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்டது இனப்படுகொலை என்பதனை அங்கீகரித்தல்

2. ஒவ்வொரு வருடமும் மே 18 ம் திகதியில் முடிவடையும் முதல் ஏழு நாட்கள் கொண்ட
வாரத்தினை தமிழின அழிப்பு அறிவியற் கிழமையாக பிரகடனப்படுத்தப்படல்

மே மாதம் 16 ம் திகதி சட்ட மன்றத்தில் நடைபெறவுள்ள இப்பிரேரணை மீதான
விவாதத்தை காண உங்களை எதிர்பார்க்கின்றேன்

விஜய் தனிகாசலம்
Member of Provincial Parliament
Scarborough-Rouge Park

Share.

About Author