கனேடியர்கள் உடனடியாக நாடு திரும்புங்கள்: எல்லைகளை மூடுவதாக அறிவித்த ட்ரூடோ!

0

கனடியர்கள் மற்றும் கனடிய நிரந்தர குடியுரிமை பெற்றவர்களை தவிர, ஏனையோர் கனடாவுக்குள் நுழைவது தடை செய்யப்படுவதாக பிரதமர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகா அவர் கூறியுள்ளார். இந்த பயண தடையிலிருந்து, ராஜதந்திரிகள், விமான பணியாளர்கள், ஐக்கிய அமெரிக்க பிரஜைகள் ஆகியோருக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள கனடியர்களை நாடு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ள பிரதமர், உடனடியாக பயணச்சீட்டுக்களை பெறுவதில் நிதி சார்ந்த சிக்கல்களை எதிர்கொள்வோருக்கு, உதவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். டொரோண்டோ, மொன்றியல், வன்கூவர், கல்கரி ஆகிய விமான நிலையங்களை வந்தடையும் சர்வதேச விமானங்களுக்கு, கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

Share.

About Author