COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட கனடியர்களுக்கு ஒரு மாதத்திற்கு தலா $2000 வழங்கப்படவுள்ளதாக கனடிய பிரதமர் அறிவித்துள்ளார்

0

COVID-19 காரணமாக வேலையில் இருந்து நீக்கப்பட்ட அல்லது வேலை இல்லாமல் இருக்கும் கனேடியர்களுக்கு, முன்னர் அறிவிக்கப்பட்ட இரண்டு வேலைவாய்ப்பு காப்பீட்டு சலுகைகளையும் அரசாங்கம் இணைப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்

தொற்றுநோய் ஊதியம் நிலுவையில் இருக்கும் வரை, தற்போது இருக்கும் ஊதிய சலுகைகளோடு மேலும் வேறு சலுகைகளும் வரலாம் என்று பிரதமர் கூறி உள்ளார். முதல் 82 பில்லியன் டாலர் உதவித் தொகுப்பு பணம் புதன்கிழமை பாராளுமன்றத்தில் இருந்து உறுதியடைந்த பின்னர் நடை முறைக்கு வரும் என்று கூறியுள்ளார்.

இப்போது நிலுவையிலுள்ள அவசர சிகிச்சை நிதி மற்றும் அவசர ஆதரவு நிதி இரண்டும் ஒன்றாக இணைத்து கனடா அவசரகால நிதி என்று ஒன்றிணைக்கப்படவுள்ளது. மேலும் அடுத்த நான்கு மாதங்களுக்கு வேலை இல்லாத மற்றும் வருமானம் இல்லாதவர்களுக்கு ஒரு மாதத்திற்கு $2000.00 வரை வழங்கப்படவுள்ளது.

COVID-19 காரணமாக வேலையை இழந்த, அல்லது நோய்வாய்ப்பட்ட, அல்லது குழந்தைகளை கவனித்துக்கொள்ளவதற்காக வேலைக்கு செல்லாமல் இருக்கும் கனடியர்களுக்கு இந்த நிதி உதவும் என்று ட்ரூடோ கூறினார். இந்த சலுகைக்கு விண்ணப்பித்து
சுமார் 10 நாட்களுக்குப் பிறகு கனடியர்கள் இந்த உதவியைப் பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.

Link: Employment Insurance benefits and leave: https://www.canada.ca/en/services/benefits/ei.html
Canada’s COVID-19 Economic Response Plan: https://www.canada.ca/en/department-finance/economic-response-plan.html

 

Share.

About Author